பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பீஸ் நகரில் பிரபல தனியார் பள்ளியில் பயிலும் 8 வயது சிறுமி, கடந்த 13ம் தேதி பள்ளியில்  இடைவிடாமல் அழுதுகொண்டிருப்பதாக பெற்றோருக்கு பள்ளி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் சிறுமியின் தந்தை பள்ளிக்கு வந்து அவரை வீட்டுக்கு  அழைத்துச் சென்றார்.

வீட்டிற்கு சென்ற சிறுமி, பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது வகுப்பறைக்கு வந்து தனியாக இருந்த தன்னை ஆடைகளை கழற்றி தவறாக நடந்துகொண்டதையும், தான் எவ்வளவோ போராடியும் அவனிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை என்றும் தற்போது உடல் முழுவதும் கடுமையான வலியை உணர்வதாகவும் தனது தாயிடம் கூறியுள்ளார். 

இதையடுத்து தங்களது மகள் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த பெற்றோர், குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என உற்றார் உறவினர் மற்றும் பொதுமக்களுடன் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனயாக பள்ளிக்கு சென்று 10 ஆம் வகுப்பு சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்