திருச்சியில் சொத்து தகராறில் மாமனாரை கொலை செய்த மருமகளுக்கு போலீஸ் வலை வீச்சு

திருச்சி அடுத்த முசிறியில் சொத்து தகராறில் மாமனாரை மருமகளே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

75 year old man killed by daughter in law in trichy

திருச்சி மாவட்டம், முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (வயது 75) இவருக்கு இரண்டு மனைவிகளும், நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் இருந்தனர். இந்த நிலையில் சொத்து தகராறு காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் மாணிக்கத்தின் இரண்டாவது மகன் கணேசன் இறந்துவிட்ட நிலையில் கணேசனின் மனைவி மருதாம்பாள் என்பவருக்கும், மாமனார் மாணிக்கத்திற்கும் இடையே சொத்து தொடர்பாக அவ்வப்போது தகராறு நடைபெற்று வந்துள்ளது.  

இந்நிலையில் நேற்று மாணிக்கத்திற்கும் மருமகள் மருதாம்பாளுக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வயலில் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மாமனார் மாணிக்கத்தை மருதாம்பாள்  அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் மாணிக்கம்  படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

பைனான்ஸ் ஊழியரின் அரைகுறை பயிற்சியால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் விபத்து

ஆனால், செல்லும் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முசிறி காவல் துறையினர் டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவின் பேரில் மாணிக்கத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் துறையினர் மாணிக்கத்தை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள மருமகள் மருதாம்பாள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து தகராறில் மாமனாரை மருமகள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியின் கொலை வழக்கு தற்கொலை வழக்காக மாற்றம் - குறிப்பிட்ட சமூகத்தினர் திரண்டதால் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios