மாணவியின் கொலை வழக்கு தற்கொலை வழக்காக மாற்றம் - குறிப்பிட்ட சமூகத்தினர் திரண்டதால் பரபரப்பு

கோபிசெட்டிப் பாளையம் அருகே சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

college student murder case changed into suicide case in gobichettipalayam

கோபிசெட்டிபாளையம் அருகே நாய்க்கன் காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மணவி சுவேதா என்பவரின் உடல் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. மாணவியின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று கொலை வழக்கு தற்கொலை வழக்குகாக மாற்றம் செய்யப்பட்டு காதலன் லோகேஷ் என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் மாணவியின் கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றிய பங்களாபுதூர் காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹிஜாவு நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை

தொடர்ந்து காவல் நிலையத்தில் ஒன்று கூடியவர்களை காவல் ஆய்வாளர்  அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாத நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் மாணவி மரணம் கொலை வழக்கிலிருந்து தற்கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர்.

காட்டு பகுதியில் அண்ணனை ஓட ஓட வெட்டி கொன்ற தம்பி கைது

மாணவி மாற்று சமூகத்தினரால் ஏமாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரே நாளில் கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். மாணவியின் மரணம் கூட்டுக்கொலை இதனை  மறைக்கின்றனர். சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட பெண்ணினுடைய குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை சமுதாயம் அனைத்து வகையிலும் போராடுவோம் என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios