ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கை, கால்களை கட்டி போட்டு 7 சிறுமி கடத்தி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் தாமோக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 வயது சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவன் வாயை போத்தி அந்த சிறுமியை கடத்தி சென்றான். பின்னர், காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கை, கால்களை கட்டிபோட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் அந்த சிறுமியின் உடலில் பல்வேறு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  இதனை அப்பகுதியில் சென்ற மக்கள்பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் முதல்வர் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, குற்றவாளியை உடனே கைது செய்ய போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதோடு சிறுமிக்கு சிறந்த மருத்துவ வசதி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமியை கடத்தி கொடூரமாக பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஊரடங்கு நேரத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.