மத்திய பிரதேசம், போபாலில் ஒரு பெண் தன் காதலனை அடைய அவரது மனைவிக்கு ஒன்றரை கோடி சொத்தை எழுதி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம், போபாலில் ஒரு பெண் தன் காதலனை அடைய அவரது மனைவிக்கு ஒன்றரை கோடி சொத்தை எழுதி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் போபாலில், சிறுமி ஒருவர் தன் பெற்றோர் அடிக்கடி சண்டையிடுவதால் வீட்டில் மோசமான சூழல் உருவாகிறது. இதனால் அவரும் அவரது சகோதரியும் படிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் சிறுமியின் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இருவருக்கும் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் சிறுமிகளுக்கு 16 மற்றும் 12 வயது ஆகிறது.
கவுன்சிலிங்கில் 42 வயதான அந்த கணவன் தன் அலுவலத்தில் வேலை செய்யும் 54 வயது விதவை பெண்ணை எட்டு ஆண்டுகளாக காதலிப்பதாகவும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் ஆனதில் இருந்தே தனக்கும் மனைவிக்கும் சுமூகமான உறவு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். முதலில் இந்த முடிவிற்கு மனைவி சம்மதிக்காததால் இவர்களுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது.
ஏறக்குறைய மூன்று சுற்று ஆலோசனைகளுக்கு பிறகு காதலி தன் காதலன் மனைவிக்கு சுமார் 60 லட்சம் மதிப்புள்ள வீடு, 27 லட்சம் ரொக்க பணத்தை கொடுப்பதற்கு சம்மதித்ததால் மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்ய சம்மதித்துள்ளார். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பணம் தேவை என்பதாலும், நிம்மதியான வாழ்வை வேண்டியும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக அந்த பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 5, 2021, 2:54 PM IST