எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டியா? பெற்ற தாய் என்று கூட பாராமல் மகன் செய்த காரியம்.!
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தை அடுத்துள்ள பண்டா மைலாரம் கிராமத்தில் 45 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
திருமணம் செய்து வைக்க தவறிய தாயை மகனே கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தை அடுத்துள்ள பண்டா மைலாரம் கிராமத்தில் 45 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாய் தவறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகன் பெற்ற தாய் என்று கூட பாராமல் செங்கலால் துடிதுடிக்க அடித்து கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க;- இரவு முழுவதும் உல்லாசம்.. அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி.!
பின்னர் போலீசாரை குழப்புவதற்காக கழுத்தை அறுத்து கால்களை வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தாயை மகனே அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க;- நிர்வாண வீடியோ கால்.. இது மாதிரி பெண்கள் தான் குறி.. யோகேஷ் குறித்து வெளியான பகீர் தகவல்..!
இதனையடுத்து, அவரது மகன், கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுததியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.