நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தவருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மரத்தில் கட்டிவைத்து தோலை உரித்த சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தன் மனைவியுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் இதேப் பகுதியில் உள்ள 4 வயது சிறுமியிடம் அன்பாகப் பழகி வந்துள்ளார். அந்த சிறுமியும் அப்பா மாதிரி அன்பாக பேசுகிறாரே என பேசியுள்ளார். 

இந்நிலையில் திடீரென நேற்று சிறுமி தனக்கு தொடர்ந்து வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர் இது குறித்து விசாரித்ததில் தன்னிடம் கந்தசாமி இப்படி செய்ததாக அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதன் பின்னர் கந்தசாமியிடம் சிறுமியின் பெற்றோர், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் விசாரித்தபோது கந்தசாமி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் ஆத்திரமடைந்த அந்த மக்கள் கந்தசாமியை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் கந்தசாமியை மீட்டு திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் கந்தசாமியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.