புதுவை காலாப்பட்டு அருகே இருக்கிறது கீழ்புத்துப்பட்டு கிராமம். தமிழக பகுதியான இங்கு அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 400க்கும் அதிகமான குடும்பங்கள் அகதிகள் முகாமில் வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். அங்கு ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற சிறுமி 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று சிறுமி வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வளாகத்தில் சக மாணவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 8ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின் அவருக்கு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுப்பதாக கூறி ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை இரண்டு பேரும் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

அமைதியை நிலைநாட்ட அனைத்தும் செய்ய தயார்..! ரஜினி அதிரடி..!

பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு திரும்பிய சிறுமி சோர்ந்து காணப்பட்டுள்ளார். அவரது உடலிலும் காயங்கள் இருந்துள்ளது. அதுகுறித்து பெற்றோர் கேட்கவே நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை 8ம் வகுப்பு மாணவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. சிறுமி தற்போது சிகிச்சைக்காக புதுவை ராஜீவ்காந்தி குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 8ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.