Asianet News TamilAsianet News Tamil

நண்பனுக்கு கொரோனா..! வதந்தி பரப்பிய வாலிபர்கள் அதிரடி கைது..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 2 வாலிபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக புகைப்படத்துடன் செய்தி சேனல்களில் வருவதுபோல் பிரேக்கிங் நியூஸ் போட்டு வாட்ஸ்-அப், முகநூலில் பரவியது. அதை கண்டு புகைப்படங்களில் இருந்த வாலிபர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

3 youth arrested for spreading rumors about corona
Author
Gudiyattam, First Published Mar 18, 2020, 2:46 PM IST

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 147 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். 125 இந்தியர்களும் 25 வெளி நாட்டவர்களும் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

3 youth arrested for spreading rumors about corona

இதனிடையே கொரோனா தொடர்பாக ஏராளமான வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வதந்தி பரப்புவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 2 வாலிபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக புகைப்படத்துடன் செய்தி சேனல்களில் வருவதுபோல் பிரேக்கிங் நியூஸ் போட்டு வாட்ஸ்-அப், முகநூலில் பரவியது. அதை கண்டு புகைப்படங்களில் இருந்த வாலிபர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!

3 youth arrested for spreading rumors about corona

வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் வதந்தி பரப்பியவர்கள் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சேர்ந்த கல்லூரி மாணவன் விஜயன் (வயது 19), செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ள சுகுமார் (19), எலக்ட்ரீசியன் சிவகுமார் (22) ஆகியோர் என்பது தெரியவ வந்தது. இதில் விஜயன், பாதிக்கப்பட்டவரின் நண்பர் ஆவார். விளையாட்டிற்காக இதுபோன்று வதந்தி பரப்ப அது வினையாக முடிந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு அடைப்பு தான் ஒரே வழி..! அதிரடி கிளப்பும் மருத்துவர் அன்புமணி..!

Follow Us:
Download App:
  • android
  • ios