ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் முத்துராஜ் என்பவருக்கு தென்காசி நீதிமன்றம்
தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி (65). அவரது மகள் பேச்சிதாய் (43). இவருக்கு 6 பெண்கள் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட 2-வது மகளை வீட்டில் விட்டுவிட்டு வயல்வெளிக்கு வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் முத்துராஜ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து பேச்சிதாய் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையும் படிங்க;- 2 நாளில் 2 MLA மறைவு.. பொதுச்செயலாளர் கவலைக்கிடம்.. அதிரடியாக ரத்து செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!

இதனால், ஆத்திரமடைந்த முத்துராஜ் பேச்சிதாய் குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், 2016-ம் ஆண்டு அரிவாளுடன் பேச்சித்தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் அங்கு இல்லாததால் ஆத்திரத்துடன் வெளியேறிய ஆண்டவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு அமர்ந்திருந்த பேச்சித்தாயின் தந்தை கோவிந்தசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க;- பெண் குழந்தைகளுடன் பெற்றவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் திரௌபதி... ராமதாஸ் அதிரடி ட்வீட்..!

கொலை வெறி அடங்காத ஆண்டவர் ரத்தம் சொட்டச் சொட்ட அரிவாளுடன் பேச்சித்தாய், மாரியம்மாள் ஆகியோரை தேடி ரெட்டியார்பட்டி சாலைக்கு சென்றார். ஊரக வேலை திட்ட பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அவர்கள் இருவரையும் ஆண்டவர் வழிமறித்து சரமாரியாக வெட்டினார். இதில் மாரியம்மாள் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். அரிவாள் வெட்டில் காயமடைந்த பேச்சித்தாயும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் ஆலங்குளம் போலீசார் கூற்றி வளைத்து கைது செய்தனர். 

இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கு தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி விஜயகுமார் அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதில், 3 கொலைகளை செய்த முத்துராஜூக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.