ஒரே நேரத்தில் 2 பெண்களை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த கன்னட டிவி நடிகர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெங்களூர் கோரமங்களா பகுதியில் வேலைக்கு செல்லும் 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதி இரவு அந்த பெண்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர்.

அப்போது, வீட்டின் கதவை யாரோ தட்ட உணவு தான் வந்துவிட்டது என்று நினைத்த அந்த பெண்கள். கதவை திறந்தால்  3 ஆண்கள் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். அந்த 3 பேரும் கத்தி முனையில் அந்த இரண்டு பெண்களையும் மாறி மாறி கற்பழித்துள்ளனர்.  இதையடுத்து அந்த பெண்கள் கோரமங்களா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கன்னட டிவி நடிகர் ராகேஷ், கேப் டிரைவர் மணிகண்டா, பானி பூரி விற்கும் சூர்யா ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். அந்த 3 பேரும் பாதிக்கப்பட்ட பெண்களை கத்தியைக் காட்டி  இங்கு நடந்தது குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண்கள் நடந்ததை தங்கள் தோழிகளிடம் தெரிவித்து அழ அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.