சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்.! விஷயம் தெரிந்த தந்தை..! என்ன செய்தார் தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியிடம் 17 வயது சிறுவன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பின்னர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியிடம் ஆசைவார்தை கூறி 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியிடம் 17 வயது சிறுவன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பின்னர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரம் சிறுவனின் தந்தை முத்துராஜ் உள்ளிட்ட 4 பேருக்கு தெரியவந்ததை அடுத்து கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் கருவை கலைக்க முடியாது என்று மருத்துவர் கைவிரித்துவிட்டனர். இதனையடுத்து, அந்த சிறுமியை சிறுவனின் உறவினர்கள் இதுதொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும் நடந்த சம்பவத்தை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், சிறுவனுக்கு உடந்தையாக இருந்து உறவினர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.