16 வயது மாணவியை கற்பழித்த 3 கொடூரன்கள்… 35 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற கொடுமை !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 8, Nov 2018, 10:04 AM IST
16 years old girl rape and murder
Highlights

குஜராத் மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவரை 3 பேர் சேர்ந்து கற்பழித்ததோடு மடடுமல்லாமல், 35 இடங்களில் கத்தியால் குத்தி கொல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், உனா பகுதி அருகே உள்ள சாலையில் 16 வயது மாணவி ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள்  போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட மாணவி கோடினார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்ததற்கு முன்தினம் காலை 8.30 மணிக்கு கையில் ஒரு புத்தகத்துடன் போனில் பேசிக்கொண்டே மாணவி வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

ஆனால் ஒரு மணிநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அந்தப் பகுதிகளில் உள்ள இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.பின்னர் 11 மணிக்கு போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை மாணவியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3-க்கும் மேற்பட்ட நபர்களால் மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவருடைய உடலில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்போது குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loader