முறையற்ற உறவுகளில் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1459 கொலைகள் நடந்து உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தகாத உறவு காரணமாக சென்னையில் மட்டும் 158 கொலைகளும், மற்ற மாவட்டங்களில் 1301 கொலைகள் நடந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது தவிர கடத்துவது, மிரட்டல் விடுப்பது, தாக்குதல் நடத்துவது என சென்னையில் மட்டும் 213 குற்றங்களும்,   பிற மாவட்டங்களில் 621 குற்ற சம்பவங்கள் நடந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லையே... தொடர்ந்து அதிகரித்து வரும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது? ஆபாச படத்தை பார்ப்பதால் இது போன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறதா? மிக எளிதாக மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பதால் வருகின்ற விளைவு தான் இதுவா? என பல்வேறு கோணங்களில் நீதிபதிகள் கேள்வி எழுப்பி வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

முறையற்ற உறவுகளால் தான் பெற்ற பிள்ளையை கொல்லக்கூடிய அளவிற்கு ஒரு தாய் துணிந்து நடக்கக்கூடிய ஒரு சமூகமாக இந்த சமூகம் மாறி உள்ளதை நினைத்து நீதிபதிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். முறையற்ற உறவுகள் திருமணம், குடும்பம் என்ற ஒரு கட்டமைப்பை தவற விடுவதாகவும் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தி விடுவதாக, நீதிபதிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.