ஆசைவார்த்தை கூறி 13 வயது சிறுமியை நாசம் செய்து திருமணம்.! போக்சோவில் தூக்கிய போலீஸ்.. தாயாரும் கைது.!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (23 ). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி. இவர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
வாணியம்பாடியில் 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (23 ). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி. இவர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனுக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலன் துடிதுடிக்க வெட்டி படுகொலை! காரில் இருந்து படியே ரசித்த கள்ளக்காதலி பிரியா! வெளியான பகீர் தகவல்!
அதன் அடிப்படையில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் அவர்களை அழைத்து விசாரணை செய்ததில் 13 வயது சிறுமியை 23 வயது இளைஞர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையதிற்கு மாற்றப்பட்டு விசாரணை செய்து 13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த விஜய் (23) என்ற இளைஞர் மீது குழந்தை கடத்தல், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்சோ உட்பட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- நடு இரவில் திடீரென மாயமான மனைவி! ஆண் நண்பர்களுடன் மதுவிருந்து, உல்லாசம்! நேரில் பார்த்த ஃபாரின் ரிட்டன் கணவன்!
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த விஜயின் தாயார் மஞ்சுளா (47), அவருடைய சித்தி வேண்டாமணி ( 42) உள்ளிட்ட 3 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.