திருப்பத்தூரில் செல்போன் திருடியாக தம்பி மீது குற்றம் சுமத்தியை அக்காவை 13 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் கோகிலா (வயது 19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்ப் படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோனிஷாவின் சித்தி இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது சித்தப்பாவின் மகன் 13 வயது சிறுவன் கைபேசியை திருடியதாகக் கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால் மோனிஷா அவன் தான் கைபேசியை திருடியதாக அனைவரிடமும் கூறி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தன்னை அக்கா அவமானம் படுத்தி விட்டதாகக் கூறி கத்தியால் அக்காவின் தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியதாகக் கூறப்படுகின்றது. மேலும் இதனை தடுக்க வந்த அவரது பாட்டி பாப்பாத்தி அம்மாளையும் லேசாக வெட்டியுள்ளான்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். செல்போன் மோகத்தால் 13 வயது சிறுவன் கத்தியால் அக்காவையும், பாட்டியும் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.