தேர்வில் காப்பி.! கண்டித்த ஆசிரியர்.! 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் !

ஆசிரியர்கள் கண்டித்ததால் 14வது மாடியில் இருந்து குதித்து 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10th std student jumps to death from 14floor apartment at Bengaluru

பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின், பள்ளியில் நடந்த தேர்வு ஒன்றில் காபி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை தந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவன் மோஹின், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது நாகவாலா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளான். அங்கு 14வது மாடியில் இருந்து குதித்தார். மாடியில் உள்ள சுவற்றில் சிக்கிக்கொண்டு மோஹின் தொங்கிக் கொண்டிருந்தான்.

இதையும் படிங்க..10% இட ஒதுக்கீடு.! உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா ? சர்ச்சைகளுக்கு காரணம் என்ன ?

10th std student jumps to death from 14floor apartment at Bengaluru

இந்நிலையில் அவனை காப்பாற்ற  குடியிருப்பில் வசித்துவருபவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றனர்.   அப்போது அவர்கள் மோஹினின் கையை பிடிக்க சென்ற நிலையில்,  உடனடியாக தனது கையை சுவற்றில் இருந்து விடுவித்து மோஹின்  கீழே விழுந்தான்.  பிறகு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை குறித்து சம்பிஹேவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?

10th std student jumps to death from 14floor apartment at Bengaluru

அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு மாணவன் மொஹின் ஏன் சென்றான் ? எவ்வாறு சென்றான் ? ஆசிரியர் கண்டித்தது தான் முக்கியமான காரணமா ? போன்றவற்றை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..காங்கிரசால் நிலையான ஆட்சி கொடுக்க முடியாது.! இமாச்சல பிரதேச தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios