பெற்றோரை கொன்றுவிடுவதாக கூறி 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை; சென்னையில் பயங்கரம்
அம்மா, அப்பாவை கொலை செய்துவிடுவேன் என்று கூறி 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்கி (வயது 22). இவர் 10ம் வகுப்பு மாணவி ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்கி தோழி மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஆள் இல்லாத தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் தான் வைத்திருந்த மதுபானத்தில் வெள்ளை நிற பொடியை கலக்கி மாணவிக்கு கொடுத்துள்ளார். அவர் மறுப்பு தெரிவிக்கவே அவரை மிரட்டி அதனை குடிக்கவும் வைத்துள்ளார். அதனை குடித்ததும் சுய நினைவை இழந்த மாணவியை விக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்து தான் இருந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து விக்கியுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, நீ என்னுடன் பேசவில்லை் என்றால் உனது அப்பா, அம்மாவை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஏற்கனவே தனக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவன், கொலை செய்ய அஞ்சமாட்டான் என்று எண்ணிய மாணவி விக்கியின் அழுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 2வது கணவரை கொல்ல முயற்சி
இதனை பயன்படுத்திக்கொண்ட விக்கி மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சந்தேகமடைந்த ஆசிரியர்கள் இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெற்றோர் நடத்திய விசாரணையில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விக்கியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடிபோதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த மனைவி!!