வளர்ப்பு மகளை நாசம் செய்த தந்தை; தமிழருக்கு கேரள நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை!
Kerala Court : இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த வளர்ப்பு மகள் மற்றும் அந்த தந்தை ஆகிய இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஷ்ரப் ஏ எம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம், ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் அந்த தமிழகத்தை சேர்ந்த நபருக்கு மொத்தம் 141 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பிட்டுள்ளார்.
தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது மைனரான வளர்ப்பு மகளை பல ஆண்டுகளாக, பலமுறை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அந்த நபருக்கு 141 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தமிழர் என்பதை தவிர வேறு தகவல்கள் அவரை பற்றி வெளியிடப்படவில்லை.
மனித-வனவிலங்கு மோதலைக் குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்! யோகி ஆதித்யநாத் அரசு!
எவ்வாறாயினும், அந்த நபர் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிப்பார், ஏனெனில் அந்த நபருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைகளில் இதுவே அதிகபட்ச தண்டனையாகும், மேலும் நவம்பர் 29 ஆம் தேதி நீதிமன்றத்தின் உத்தரவின்படி மாறுபட்ட தண்டனைகள் ஒரே நேரத்தில் அவருக்கு அளிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அந்த குற்றவாளிக்கு ரூ.7.85 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளியும் பாதிக்கப்பட்டவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மைனரான அந்த வளர்ப்பு மகளை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுமி, தனது தோழி ஒருவரின் ஆலோசனையின் பேரில், இறுதியாக தனது தாயிடம் தனது மன வேதனையை கூறியுள்ளார். அதன் பிறகு அந்த தாயார் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
பெங்களூரு பயங்கரவாத வழக்கு: ருவாண்டாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட முக்கிய தீவிரவாதி..