காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா நெய்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்திற்கு சென்றார். 

10-ம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா நெய்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி வந்திருந்தார். 

இதையும் படிங்க: கொழுந்தியாளை பலாத்காரம் செய்த மாமா! வீடியோவை காட்டி மிரட்டி ஓயாமல் உல்லாசம்! அதிர்ச்சியில் காதல் மனைவி!

அப்போது தூங்கி கொண்டிருந்த மாணவியை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் அவரை பரிசோதித்த போது பள்ளி மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 

இதையும் படிங்க: ஜிம்முக்கு வரும் பெண்களை ஜம்முன்னு கரெக்ட் செய்த மிஸ்டர் வேர்ல்ட்! அடங்காத சேட்டை! யார் இந்த மணிகண்டன்?

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சின்ராசுவை தேடி வருகின்றனர்.