Asianet News TamilAsianet News Tamil

அதிரடி சோதனையில் சிக்கிய ரூ.1.25 கோடி… கந்துவட்டி வசூல் செய்த 18 பேர் கைது… கோவையில் பரபரப்பு!!

கோவையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கந்துவட்டி வசூல் செய்த 18 பேர் கைது செய்யப்பட்டதோடு  அவர்களிடம் இருந்து சுமார் 1.25 கோடி ரொக்கம், சொத்து ஆவணங்கள், ஏடிஎம், பாஸ்போட்  உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

1.25 crore caught in raid and 18 people arrested for extortion at covai
Author
Coimbatore, First Published Jul 29, 2022, 8:55 PM IST

கோவையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கந்துவட்டி வசூல் செய்த 18 பேர் கைது செய்யப்பட்டதோடு  அவர்களிடம் இருந்து சுமார் 1.25 கோடி ரொக்கம், சொத்து ஆவணங்கள், ஏடிஎம், பாஸ்போட்  உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கந்துவட்டி தொடர்பாக 16 இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் கணவன்.. உறவுக்கார இளைஞர்களுடன் ஷிப்ட் போட்டு உல்லாசம் அனுபவித்த மனைவி.. இறுதியில் பயங்கரம்.

சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்ட இந்த சோதனை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை, மதுக்கரை உட்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் கோவையை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்ற பைனான்ஸ் அதிபர் வீட்டில் இருந்து 1.12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கொடூரம்.! 9 பேர் கூட்டாக சேர்ந்து 11 வயது சிறுமியை சீரழித்த சம்பவம்.. பரபரப்பு !

இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கந்துவட்டி கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 1.25 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக திருமலையாம்பாளையம் நடராஜன் உட்பட 18 பேரை கைது செய்தனர். மேலும் கந்துவட்டி கொடுப்பவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய 379 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படடது.  

Follow Us:
Download App:
  • android
  • ios