நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல்  75 நாட்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் 18 வயது மேற்பட்டவர்கள் அனவரும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்‌ பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால்‌, 18 முதல்‌ 59 வயது வரையிலானவர்கள், தனியார்‌ மையங்களில்‌ கட்டணம்‌ செலுத்தி இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் சுகாதாரப்‌ பணியாளர்கள்‌, முன்களப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க:இளநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வு தொடங்கியது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

இந்நிலையில் கட்டணம்‌ செலுத்தி முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக்‌ கொள்ள வேண்டியுள்ளதால் , மக்கள் பெரும்பாலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள ஆர்வம் கொள்ளவில்லை. அதனால் 18 முதல்‌ 59 வயதினரில்‌ முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய 77 கோடி பேரில்‌ ஒரு சதவீதத்துக்கும்‌ குறைவானவர்களே இதுவரை தடுப்பூசி 
செலுத்தியுள்ளனர்‌. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பூஸ்டர் தடுப்பூசியை 18 வயது மேற்பட்டோருக்கு இலவசமாக கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டன.இதையடுத்து முன்னெச்சரிக்கை தவணையை அனைத்துத்‌ தரப்பினருக்கும்‌ கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

மேலும் படிக்க:145 நாளுக்கு பின் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. 2 வது நாளாக 20,038 பேருக்கு பாதிப்பு..

அதன்படி நாடுமுழுவதும் இன்று முதல் 75 நாட்களுக்கு 18 வயது மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் இலசவ பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் நாட்டில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,038 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க:முதல்வரை தொடர்ந்து அமைச்சரை விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா.. அதிர்ச்சியில் உ.பி.க்கள்..!