ஷாரூக்கானுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சால், எக்கச்சக்கமா சந்தோஷமாவாப்ல! பின்னே?...அவரோட ‘ஜீரோ’ படத்துக்கு லட்சக்கணக்குல லைக்ஸ் போட்டு ’ஹீரோ’ ஆக்கினதுல தமிழனின் பங்கு தாறுமாறாக இருக்குதுல்ல!... ஏனுங்க உச்சந்தலைக்கும், உள்ளங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க? என்று சிலர் கேட்கலாம். பட் விஷயமிருக்குது பாஸ், பெத்த மேட்டரு இருக்குது. 

அதாவது தளபதி விஜய்யின் ‘சர்கார்’ படம் நாளைக்கு ரிலீஸாகுது. திருட்டுக் கதை பஞ்சாயத்தையெல்லாம் தாண்டி அந்தப் படத்தின் மேக்கிங்கும், விஜய்யின் அப்டேடட் தெறி லுக்கும் அவரது ரசிகர்களை கன்னாபின்னாவென களிப்புக்கு ஆளாக்கியுள்ளது. ஆனால் இதற்கு நேர் எதிரிடையாக, அஜித்தின் அவுட்டேடட் ‘விஸ்வாசம்’ லுக் அவரது ரசிகர்களை கண்ணீர் விட வைத்திருக்கிறது. அதனால் எப்பாடு பட்டாவது விஜய்யை டம்மி பண்ண சமயம் பார்த்துக் காத்திருந்தனர். 

சர்கார் கதை திருடப்பட்டது! திருட்டுக் கதையில் நடிக்கும் இவரா ஊழலை ஒழிப்பார்!? எனும் ரீதியில் கிளப்பிவிட்டனர். ஆனால் பப்பு பெரிதாய் வேகவில்லை. ஆனாலும் சர்கார் ரிலீஸுக்கு முன்பாக விஜய்க்கு எப்படியாவது ஒரு சறுக்கலை உருவாக்கி தர தல-யின் ரசிகர்கள் தலைகீழாக நின்றனர். இந்த நேரத்தில்தான் அவரது கைகளில் லட்டு போல் வந்து சேர்ந்தார் ஷாரூக்கான். ஷாரூக் நடித்த ‘ஜீரோ’ படத்தின் டிரைலர் ரெண்டு நாட்களுக்கு முன் யூ டியூபில் வெளியானது. வெளியான ஒரே நாளில் நான்கு கோடி பார்வையாளர்களையும், பத்து லட்சம் லைக்குகளையும் பெற்று அட்ராசிட்டி செய்துள்ளது இந்தப் படம். 

இதன் மூலம் சர்கார் படத்தின் டீசர் வெளியான ஒரே இரவுக்குள் ஒரு கோடி பார்வையாளர்கள், பத்து லட்சம் லைக்குகள் வாங்கிப் படைத்த சாதனையை ஜஸ்ட் லைக் தட் ஆக தகர்த்திருக்கிறது. அதுவும், விஜய்யை விட மூன்று கோடி பார்வையாளர்களை ஒரே நாளில் அதிகம் பெற்றுள்ளார் ஷாரூக் என்பதுதான் பெரிதாய் ப்ரொஜக்ட் செய்யப்பட்டு வருகிறது. சரி, இதற்கும் தல ரசிகர்களுக்கு என்ன சம்பந்தம்? என்கிறீர்களா, ’ஜீரோ’ பட டிரெய்லர் வெளியானதும்,  திடீரென தல ரசிகர் கூட்டங்களின் முக்கிய டீமுக்கு அந்த ஐடியா உதித்துள்ளது. 

சரசரவென  தமிழகம் மற்றும் அதைத்தாண்டி இருக்கும் பலப்பல லட்சம் தல ரசிகர்களுக்கு அந்தந்த வாட்ஸ் - அப் வாயிலாக செய்தியை அனுப்பி ‘உண்மையான தல ரசிகனா இருந்தா ஷாரூக்கின் ஜீரோ பட டிரெய்லரை லைக் பண்ணுங்க. வி.ஜே.வை தெறிக்க விடலாமா?’ என்று ஒரு தகவலை பரப்பினர். தல ரசிகர்களின் நண்பர்களையும் ஷாரூக் படத்தை லைக் பண்ண சொல்லி ரிக்வெஸ்ட் வைத்தனர்.

ஏதோ மேஜிக் போல் தீ தீயாய் பரவியது இந்த தகவல். ஒரே இரவுக்குள் ஆளாளுக்கு உட்கார்ந்து உட்கார்ந்து லைக் அடித்தனர். விளைவு, ஒரே நாளில் நான்கு கோடி பார்வையாளர்களை தாண்டினார் ஷாரூக்.  விஜய்யின் ரெக்கார்டு சர்வ அலட்சியமாக சரிக்கப்பட்டது. ப்ராஜெக்ட் சக்ஸஸ்! சினிமா வெறித்தனம் எந்தளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா மக்கழே!?