இளையராஜாவின் பெயர் செல்லும் பிள்ளை என பெயரெடுத்தவர் யுவன் ஷங்கர்ராஜா. தற்போதைய இளைஞர்களின் மனதை தொடும் அளவிற்கு காதல், நட்பு, பாசம், ஏக்கம் என அனைத்தும் கலந்து தன்னுடைய பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி, இளம் ரசிகர்கள் மனதில் குடி கொண்டுள்ளார்.  இவரது இசைக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை போல், பல பிரபலங்களும் இவருடைய இசையை விரும்புகிறார்கள். 

பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் தன்னுடைய தனித்துவமான மியூசிக் மூலம் தட்டி தூக்கி வருகிறார். இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி சமீப காலமாக திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும், அடியெடுத்து வைத்துள்ள யுவன்சங்கர்ராஜா அடுத்ததாக ஆன்லைன் தளத்திலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தயாராகியுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை யுவன்சங்கர்ராஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது விரைவில் யுவன் சொந்தமாக இணைதளப்பாக்கம் ஒன்றை துவங்க உள்ளதாகவும், U1 ரெக்கார்ட்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த இணைதளப்பாக்கம் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று (அதாவது நாளை 2 மணிக்கு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்).

இந்த இணைய பக்கத்தில், இவரது இசை குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இணைய பக்கத்தை பார்க்க, யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Scroll to load tweet…