yuvan shanker raja removed visuvasam movie
நடிகர் அஜித் விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள திரைப்படம் விசுவாசம். ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது அனைவரும் அறிந்தது தான்.
இருப்பினும், அஜித் அடுத்து நடிக்க இருக்கும் 'விசுவாசம்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவலை இந்தப் படத்தைத் தயாரிக்கவிருக்கும் 'தேனாண்டாள் பிலிம்ஸ்' வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே யுவன் அஜித்தின் வெற்றிப் படங்களான தீனா, பில்லா ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அஜித் மற்றும் யுவன் கூட்டணி இணைவதாகக் கூறப்பட்ட நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
