நடிகை ஓவியா நடித்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட அவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளதால் அளவிற்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

இவர் இந்த நிகழ்ச்சியில் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் இவர் கஞ்சாகருப்புடன் பேசும் போது நீங்க ஷட் அப் பண்ணுங்க என கூறி சண்டை போட்டார்.

இந்த வார்த்தையை மையமாக வைத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தற்போது இசையமைத்து வரும் "பலூன்" திரைப்படத்தில் "ஷட்  அப் பண்ணுங்க" என ஒரு பாடலை வைத்துள்ளார். இந்த பாடலை நாங்கள் ஓவியாவுக்கு பரிசளிப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.