Asianet News TamilAsianet News Tamil

சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படத்தின் முக்கிய உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் முக்கிய உரிமை ஒன்றை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 

Yuvan Shankar Raja who got the main rights of the film manadu
Author
Chennai, First Published Jun 8, 2021, 3:11 PM IST

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் முக்கிய உரிமை ஒன்றை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: ரோஜா சீரியலில் ஷாமிலிக்கு பதில் இவர் தான் வில்லி... வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
 

சிம்பு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள், கொரோனா இரண்டாவது அலை முடிந்த பின் துவங்கி... மீதம் உள்ள பணிகள் நிறைவடைந்து ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yuvan Shankar Raja who got the main rights of the film manadu

இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்து படக்குழு அறிவித்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் மணிமேகலை உடல்நல குறைவு காரணமாக இறந்ததால், முதல் சிங்கிள்  பாடல் வெளியிட முடியாமல் போனது. இதை அடுத்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில்... 'மாநாடு' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் தகவலை வரும் புதன்கிழமை யுவன் சங்கர் ராஜா அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 'மாநாடு' படத்தின் ஆடியோ உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் யூஒன் ரெக்கார்டு என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்... கவர்ச்சிகரமான உடையில் கிக் ஏற்றும் வசுந்தரா..! செம்ம ஹாட் போட்டோஸ்..!
 

Yuvan Shankar Raja who got the main rights of the film manadu

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios