Asianet News TamilAsianet News Tamil

இளையராஜா குறித்து யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட 43 வருஷத்து பழைய செய்தி...

’அப்பாவுடன் முதன்முதலாக நான் இணைந்து இசையமைக்கும் படத்தில் இசைப்பிரியர்களை நிச்சர்யம் ஆச்சரியப்படுத்துவோம்’என்று பிரபல இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய வாரிசுமான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

yuvan shankar raja tweets about working with father
Author
Chennai, First Published Sep 14, 2019, 5:39 PM IST

’அப்பாவுடன் முதன்முதலாக நான் இணைந்து இசையமைக்கும் படத்தில் இசைப்பிரியர்களை நிச்சர்யம் ஆச்சரியப்படுத்துவோம்’என்று பிரபல இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய வாரிசுமான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.yuvan shankar raja tweets about working with father

‘மாமனிதன்’படத்தின் மூலம் இயக்குநர் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதியும் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்துவரும் நிலையில் இதில் இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைப்பார்கள் என்று சீனு ராமசாமி தகவல் வெளியிட்டிருந்தார். ஆனால் அத்தகவலை ராஜா தரப்போ யுவனோ உறுதி செய்யவில்லை. ஏனெனில் தாம் பெரும் மரியாதை வைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தவிர [மெல்லத் திறந்தது கதவு] வேறு எந்த இசையமைப்பாளருடனும் ராஜா இணைந்து பணியாற்றியதில்லை. இன்னொரு பக்கம் தனது படங்களின் பின்னணி இசை வேலைகளுக்கு மூத்த மகன் கார்த்திக் ராஜாவைப் பயன்படுத்தியிருக்கிறாரே ஒழிய யுவனை ராஜா அழைப்பதில்லை.yuvan shankar raja tweets about working with father

இந்நிலையில் தனது தந்தையுடன் இணைந்து பணியாற்றுவதை இன்று மதியம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார் யுவன். அப்பதிவில்,...முதல்முறையாக அப்பாவுடன் ‘மாமனிதன்’படத்துக்காக இணைந்து பணியாற்றுகிறேன்...இப்படத்தின் பாடல்கள் நிச்சயம் இசைப்பிரியர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்’என்று பதிவிட்டுள்ளார். ரொம்பப் பழைய நியூஸா இருக்கே யுவன் ‘அன்னக்கிளி’வந்த 1976 லருந்து கடந்த 43 வருஷமா இசை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துற ஒரே வேலையை மட்டும்தான செஞ்சிக்கிட்டிருக்காரு?

Follow Us:
Download App:
  • android
  • ios