Yuvan shankar raja: இளையராஜாவின் மகனாக, தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தனக்கென தனி முத்திரை பதித்து ஒரு இளம் இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

இளையராஜாவின் மகனாக, தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தனக்கென தனி முத்திரை பதித்து ஒரு இளம் இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

யுவன் ஷங்கர் ராஜா ஆரம்ப கால பயணம்:

தமிழ் சினிமாவிற்கு, அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யுவன் சங்கர் ராஜா 150 க்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்துள்ளார். இவரது இசையில், அஜீத் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தின் பின்னணி இசையை யாராலும், அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் இளசுகளை கட்டி போட்டு வைத்தவர்.

தமிழ் சினிமாவின் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க....RRR movie day 3: படத்தின் மொத்த செலவை மூன்றே நாளில் வசூல் செய்த 'ஆர்ஆர்ஆர்' படம்..! எத்தனை கோடி தெரியுமா..?

வலிமை பாடல்கள்:

இவருடைய இசை பயணம் 34 ஆண்டுகளை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. கடைசியாக, இவருடைய இசையில் வலிமை பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்து வருகின்றனர். இது தவிர, மாமனிதன், நானே வருவேன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் இவரது இசையில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில், தற்போது யுவன் ஷங்கர் ராஜா சுற்றுலா சென்றுள்ளதாக தெரிகிறது. 

 மேலும் படிக்க....Rakul preet Singh hot: கருப்பு நிற உடையில் மிளிரும் ரகுல் பிரீத் சிங்...இளசுகளின் சுண்டி இழுக்கும் ஹாட் லுக்!

குத்தாட்டம் போட்ட யுவன் ஷங்கர் ராஜா:

 இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல்வேறு பாடல்கள் படி, ஹிட் கொடுத்துள்ள யுவன்சங்கர் ராஜா, எப்போதும் அமைதியாக இருப்பவர். ஆனால் அவர், தற்போது ஜாலி மூடிற்கு சென்றுள்ளார். ஆம், அவர் பொது இடத்தில் ஹிட் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Scroll to load tweet…