பாடல் வெளியான சில விநாடிகளில் இருந்தே பல்வேறு சாதனைகளை படைத்து வரும் வலிமை பாடல் தற்போது 13 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக படம் குறித்த அப்டேட் அனைத்துமே தள்ளிப்போக, ரசிகர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக கடந்த 11ம் தேதி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனை சோசியல் மீடியாவில் தல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


 தல அஜித் திரையுலகிற்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. நாங்க வேற மாரி எனத் தொடங்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விக்னேஷ் சிவன் வரிகளில், யுவனின் இசையில் வெளியான இந்த பாடல் தான் படத்தில் அஜித்திற்கான இன்ட்ரோ எனக்கூறப்படுகிறது. பாடல் வெளியான சில விநாடிகளில் இருந்தே பல்வேறு சாதனைகளை படைத்து வரும் வலிமை பாடல் தற்போது 13 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் இன்ட்ரோ பாடல் உருவான சுவாரஸ்ய தகவல் குறித்து கேள்விக்கு யுவன் அளித்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. “படம் தொடங்கும் காலக்கட்டத்திலேயே அஜித் சாருக்கு மாஸான இன்ட்ரோ பாடல் வேண்டும் என்று வினோத் கூறியிருந்தார். ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் விதத்தில் பாடல் வர வேண்டுமென்று விரும்பினேன். அப்படியே இந்தப் பாடலும் உருவானது” என தெரிவித்துள்ளார்.