young actor commited sucide
கடந்த சில வருடங்களாக மனஅழுத்தம் உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகள் காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது போன்ற முடிவுகளை இதுவரை தென்னிந்திய நட்சத்திரங்கள்தான் எடுக்கின்றனர் என்றால் தற்போது இது போல் ஒரு முடிவை ஹாலிவுட்டைச் சேர்ந்த பிரபல இளம் நடிகரும் எடுத்துள்ளார்.
பல ஹாலிவுட் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பிராட் புபாண்ட' என்கிற 34 வயதான இளம் நடிகர். தான் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்குப் பின் இவருடைய அறையை சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை தற்கொலைக்கான காரணத்தை வெளியிடவில்லை. எனினும் இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது
