Youll look more stylish without that cigarette.

இன்று விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாலை விஜய் நடிக்கும் சர்கார் படத் தலைப்பு வெளியீடு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டனர் படக்குழுவினர். விஜயின் இந்த மாஸ் லுக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம் போல விஜய்யின் பர்ஸ்ட் லுக் சர்ச்சையை ஏற்படுத்தவும் தவறவில்லை, இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் “வாயில் சிகரெட்டோடு படு இளமையாக, ஸ்டைலிஷாக இருக்கிறார்.

இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் யின் போஸ்டரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி சர்கார் பட பர்ஸ்ட் லுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நடிகர் விஜய் தனது அடுத்த படத்தின் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல போஸ் கொடுத்திருப்பதால் அவமானப்படுகிறேன்.” தனது அடுத்த டிவீட்டில் அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள் என்று கூறியுள்ளார். மேலும், புகைப்பழக்கம் கொல்லும், புகைப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும் என ஹேஷ்டேக் போட்டுள்ளார். 

You’ll look more stylish without that cigarette.#SmokingKills#SmokingCausesCancerpic.twitter.com/UUvzgrffHN

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 21 June 2018