You will have to wait for the release of the movie
அஜீத் நடிப்பில் உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தின் இசை ஜூலை 27-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் படம் ‘விவேகம்’.
இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ளனர்ர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பல புதிய சாதனைகளைப் படைத்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ‘சர்வைவா’ என்ற பாடலின் 25 வினாடி டீசர் மட்டும் வெளியானது. இந்த டீசரும் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் படத்தின் இசை வெளியீட்டை விரைவாக நடித்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
வருகிற ஜுலை 27-ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
