You can win only by telling something by snegan revels the truth
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் சுயநலமாக இருக்க வேண்டும் என்று ஓவியாவுக்கு கவிஞர் சிநேகன் அறிவுரை கூறியுள்ளார்.
ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்து தற்போது தமிழிற்கு வந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் அவர் மக்களின் பிரதிநிதி என்று அடிக்கடி தானே கூறி வருகிறார்.
மக்கள் மத்தியிலும், சமூகவலைதளங்களிலும் இந்த நிகழ்ச்சி ஒரு விவாத பொருளாகவே தற்போது மாறியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் சினிமாவில் பிரமலமாக இருந்து தற்போது பிரபலமற்று கிடக்கும் நடிகர் நடிகைகள் என 15 பேர் பங்கு பெற்றுள்ளனர்.
இதில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை போட்டுக்கொடுப்பது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுதான் முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறி மக்களை தினமும் கவர்ந்து வருகின்றனர்.
இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியிட்ட விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் ஒரு உண்மை தன்மையை போட்டு உடைத்துள்ளார்.
அதாவது சினேகனும், ஓவியாவும் பேசி கொள்ளுமாறு ஒரு சீன் வெளியாகிறது. அதில் சினேகன் இந்த போட்டியில் செல்ஃபிஸா இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என கூறுகிறார்.
மேலும் திடீரென காரணமே இல்லாமல் ஒருவரை பற்றி எப்படி குறை கூறி வெளியே அனுப்ப பரிந்துரைப்பது என ஓவியாவிடம் கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் ஓவியா அதையெல்லாம் நாம் பார்க்க்கூடாது. மனசாட்சியுடன் இருக்க கூடாது என தெரிவித்தார்.
