நயன்தாராவை ஒருதலையாய்க் காதலிப்பதுபோல் யோகிபாபு பாடி நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல் வலைதளங்களில் வைரலானதைத்தொடர்ந்து அடுத்து வெளிவரவிருக்கும் நயனின் ‘ஐரா’ படத்திலும் யோகிபாபுவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2019ல் ‘யோகி’ படத்தில் குட்டிப் பாத்திரம் ஒன்றில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாகிவிட்டார் யோகிபாபு. 2018 ல் வருடம் முழுவதுமே 20 படங்களில் நடித்த யோகிபாபுவுக்கு 2019 தொடங்கி இரண்டு மாதங்களே முடிந்துள்ள நிலையில் தற்போது மட்டுமே 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். 

அவரது ஷெட்யூல் மிகவும் பிசியாக இருப்பதால் முன்னணி ஹீரோக்கள் கூட அவருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டுகளைச் சமாளிக்க சில சமயங்களில் ஒரு படத்திற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே கால்ஷீட் தரும் யோகிபாபு ஒரே நாளில் நான்கு படங்களில் நடிக்கும் சம்பவங்களும் நடந்தேறிவருகின்றன.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள நடிகை நயன் தாராவின் ‘ஐரா’ பட போஸ்டரில் நயனும் யோகிபாபுவும் ‘கோலமாவு கோகிலா’ பட ஸ்டைலில் ஒரு ரொமாண்டிக் லுக் விடும் போஸ் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. லேட்டஸ்ட் தகவல்களின்படி சம்பள விஷயத்தில் யோகிபாபு வைகைப்புயல் வடிவேலுவை ஓவர்டேக் பண்ணிவிட்டதாகவும் 4 நாள் கால்ஷீட்டுக்கே அவர் சுமார் 50 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது.