சிறு காமெடி கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகி, இன்று முன்னணி காமெடி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளவர் நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'கூர்க்கா'. காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா, சென்னை வடபழனியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உட்பட, விநியோகஸ்தரர்கள் பலர் கலந்து கொண்டனர். 

ஆனால் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் யோகி பாபு மட்டும் வரவில்லை. இவரின் வருகைக்காக, 6 மணி முதல், 8 மணி வரை பலர் காத்திருந்தும் பயன் இல்லாததால். 8 மணிக்கு மேல், யோகி பாபு இல்லாத வருத்தத்துடனே நிகழ்ச்சி ஆரம்பமானது.

படக்குழுவினர் அனைவரும், யோகி பாபு பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும், வந்து தலையையாவது காட்டி சென்றிருக்கலாம் என தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். இவருடைய செயல் சிலரை கடுப்பேறியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. 

இந்நிலையி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் சென்றதற்கு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார் யோகிபாபு.  இந்த டப்பிங் வேலையை இன்றோடு முடிக்க வேண்டும். ஏனென்றால் நாளையிலிருந்து சிவகார்த்திகேயனுடனான ஷூட்டிங் வெளியூரில் ஆரம்பமாகிறது என யோகிபாபு தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.