தமிழ்சினிமாவில் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர் யார் என்று சொன்னால் கொஞ்சம் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த யோக நடிகர் வேறு யாருமல்ல, சூப்பர்ஸ்டார் படம் முதல் சுமார் ஸ்டார் படங்கள் ஒன்று விடாமல் நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபுவேதான். 

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஷங்கர் தந்திருக்கும் புகாரால்,வைகைப்புயல் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் வீட்டில் புகைந்துகொண்டிருக்க, அடுத்து நல்ல நிலையில் இருந்த பரோட்டா சூரி அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க, காமெடியில் தனி ராஜாவாகக் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு.

கடந்த மூன்று மாதங்களில் 30 புதிய படங்கள் துவங்கப்பட்டிருக்கிறது என்றால் அதில் சுமார் இருபது படங்களிலாவது இருக்கிறார் யோகிபாபு. தற்போது சுந்தர்.சி. சிம்பு காம்பினேஷனில் லேட்டஸ்டாக கமிட் ஆகியிருக்கும் யோகிபாபுவுக்கு அப்படத்திற்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய். அப்படத்திற்கு 20 நாட்கள் வரை கால்ஷீட் தந்திருக்கிறார் யோகி. 

இதே தொகையை சுமார் ஆறுமாதங்கள் முன்புவரை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த பரோட்டா சூரி, ‘சம்பளத்தை எவ்வளவு வேணும்னாலும் குறைச்சிக்கிறேன். நல்ல கேரக்டர் இருந்தா கூப்பிடுங்க பாஸ்’ என்று தெரிந்த இயக்குநர்களுக்கு தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார்.