Asianet News TamilAsianet News Tamil

ஃபேஸ்புக்கில் லைவ்வாக வெளியிடப்பட்ட யோகிபாபுவின் ‘தர்ம பிரபு’...பா.ஜ.க.வினர் கைவரிசையா?...

ரிலீஸ் படத்தயாரிப்பாளர்கள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், யோகிபாபுவின் லேட்டஸ்ட் படமான ‘தர்மபிரபுவை ஃபேஸ்புக்கில் லைவ்வாக வெளியிட்டு தயாரிப்பாளர் பிழைப்பில் மண் அள்ளிப்போட்டிருக்கிறார்கள்.

yogibabu's dharma prabhu live telecasted in facebook
Author
Chennai, First Published Jul 1, 2019, 3:10 PM IST

ரிலீஸ் படத்தயாரிப்பாளர்கள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், யோகிபாபுவின் லேட்டஸ்ட் படமான ‘தர்மபிரபுவை ஃபேஸ்புக்கில் லைவ்வாக வெளியிட்டு தயாரிப்பாளர் பிழைப்பில் மண் அள்ளிப்போட்டிருக்கிறார்கள்.yogibabu's dharma prabhu live telecasted in facebook

யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள தர்மபிரபு திரைப்படம் மூன்று தினங்களுக்கு முன்பு கடந்த வெள்ளியன்று  வெளியானது. முத்துகுமரன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதாரவி, ரேகா, மனோபாலா, அழகம் பெருமாள், சிறப்புத் தோற்றத்தில் ஜனனி ஐயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எமலோக கதையை பின்னணியாக கொண்டு தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, விவசாயம், என சமூக கருத்துகளுடன் காமெடி கலந்து இந்தப் படம் வெளியானது. தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். இதையறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.yogibabu's dharma prabhu live telecasted in facebook

படம் வெளியானதிலிருந்தே ‘தர்ம பிரபு’ பா.ஜ.க.வுக்கு எதிரான படம்.சென்சார் போர்டு எப்படி இப்படத்தை அனுமதித்தது என்ற கேள்விகளுடன் பா.ஜ.கவினர் சிலர் ஆக்ரோஷமான பதிவுகளை இட்டு வந்தனர். அவர்களில் யாராவது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது இருக்கும் வெறுப்பில் இப்படி செய்திருக்கக்கூடும் என்று படக்குழுவினர் சந்தேகிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios