Yogibabu new movie : யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள பொம்மை நாயகி, பன்னிக்குட்டி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர், தற்போது டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்துள்ள பொம்மை நாயகி, பன்னிக்குட்டி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் யோகிபாபு. அப்படத்திற்கு பெரியாண்டவர் என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம் கொண்டான், இவன் தந்திரன், பூமராங் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவர் அடுத்ததாக யோகிபாபுவை வைத்து இயக்க உள்ள பெரியாண்டவர் திரைப்படம் டைம் டிராவல் கதையம்சத்தை மையமாக வைத்து தயாராக உள்ளதாம்.

இப்படத்தில் நடிகர் யோகிபாபு சிவன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Nenjuku needhi review : உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ பாஸா? ஃபெயிலா? - டுவிட்டர் விமர்சனம் இதோ