இயக்குனர் புவன் நல்லான் இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜாம்பி'. வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ளது இந்த படத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மனோபாலா , சுதாகர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'ஜாம்பி' திரைப்படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.