காமெடி நடிகரான யோகிபாபு தற்போது கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் தர்ம பிரபு.இந்த படத்தை பார்ப்பதற்காக தர்பார் படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார் யோகிபாபு. 

யோகி பாபு எடுத்த அதிரடி முடிவு..! இனி இதை மட்டும் செய்யவே மாட்டாராம்..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காமெடி நடிகரான யோகிபாபு தற்போது கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் தர்ம பிரபு.இந்த படத்தை பார்ப்பதற்காக தர்பார் படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார் யோகிபாபு.

தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து உங்களுக்கு கிடைத்த அனுபவம் பற்றி தெரிவிக்கும் போது, "உலகத்திலேயே ஹீரோ எமதர்மன் தான்.அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு எனக்கு சந்தோஷம். இருந்தாலும் ஹீரோவாக நடிக்கக்கூடாது என நான் நினைக்கிறேன். ஏற்கனவே காமெடியாக நடித்தது போலவே, விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் என ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவே விருப்பப்படுகிறேன்

அவர்களுடன் இணைந்து காமெடி சீன்களில் நடிப்பதே எனக்கு விருப்பம். இனி வரும் படங்களில் நாயகனாக நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார் யோகி பாபு. யோகி தற்போது மேலும் பல படங்களில் கமிட் ஆகி உள்ளதால மிகவும் பிஸியான நபராக வலம் வருகிறார் யோகி பாபு.