தமிழ் சினிமாவில்,  சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கி இன்று, முன்னணி காமெடி நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் யோகி பாபு.  இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தர்மபிரபு'. 

தமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கி இன்று, முன்னணி காமெடி நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் யோகி பாபு. இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தர்மபிரபு'.

இந்த படத்தில் எமதர்ம ராஜாவின் மகனாக யோகிபாபு நடித்துள்ளார். காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் யோகிபாபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது வரும் 4 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். தற்போது இசை வெளியீட்டு விழாவின் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…

இந்த படத்தில் யோகி பாபு தவிர, முக்கிய வேடத்தில் நடிகர் கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் முத்துக்குமரன் இயக்கிய இயக்கியுள்ள இந்த படத்தை,ஸ்ரீவாரி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.