பல கஷ்டங்களை கடந்து தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் யோகிபாபு ஹீரோ அம்சத்துடன் நடித்த படங்கள் கூட முதலுக்கு மோசம் இல்லாமல் ஓடி வெற்றி பெற்று விடுவதால், சில சிறு பட்ஜெட் படங்களுக்கு இவரை வைத்து புரோமோஷன் நடந்து வருகிறது.

யோகி பாபு மார்க்கெட் உச்சத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு அவர் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரு சில காட்சிகளில் மட்டுமே யோகி பாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருப்பாகாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்களை ஏமாற்றுவது போல், யோகி பாபு நடிக்காத படம் ’தெளலத்', இந்த படத்தில் யோகி பாபுவின் புகைப்படத்தை வெளியிட்டு பட குழு விளம்பரம் செய்துள்ளது. இதை அறிந்த யோகி பாபு, உடனடியாக இந்த தகவலை மறுக்கும் விதத்தில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதில் அவர் கூறியிருப்பதாவது, இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார். இதில் இருந்து யோகி பாபு நடிக்காத சில படங்களுக்கு கூட அவரை வைத்து புரோமோஷன் செய்வது தெரிகிறது.