யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் திரைப்படம்  ''பன்னிக்குட்டி'' இந்த படத்தை பெரிய பட்ஜெட் படங்கள் முதல், சிறிய பட்ஜெட் படங்கள் வரை தயாரித்து வரும், லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர்  அனுசரண் முருகையா இயக்குகிறார்.

கருணாகரன், யோகிபாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, T.P கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை  உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஆண்டவன் கட்டளை, 49-0, கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில், யோகிபாபு வெள்ளை பண்ணி குட்டியை கொஞ்சுவது போல் வளியானது,  இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க பன்னிகுட்டியுடன் யோகி பாபு அடிக்கும் லூட்டியை, மையப்படுத்தி காமெடியாக எடுக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவத்தைந்து விட்டதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

 

மேலும் மாப்பிள்ளை கெட்டப்பில் யோகி பாபு இருப்பது போல் , ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.