பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவிற்கும் - மஞ்சு பார்கவி என்கிற பெண்ணிற்கும், கடந்த பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையாக கோவிலில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்களுடைய  திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

சூழ்நிலை காரணமாக யாரையும் தன்னால் அழைக்க முடியவில்லை என்றும், மார்ச் அல்லது ஏப்ரல் மாதம், திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் என யோகி பாபு அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது யோகி பாபுவின் திருமண வரவேற்பு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து யோகி பாபு தன்னுடைய திருமண அழைப்பிதழ்களை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பல முக்கிய பிரபலங்களையும், பிரமுகர்களையும் நேரில் சந்தித்து வரவேற்பு அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக, கொரோனா வைரஸின் தாக்கத்தால், ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் நடைபெற இருந்த திருமணங்கள் மற்றும் பல விசேஷங்களும் தேதி மாற்றப்பட்டது.

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணம் என்றால்,   30 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும், கூட்டம் கூட கூடாது என பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் மத்தியில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் யோகி பாபுவின் திருமண வரவேற்பு... திட்டமிட்டது போல்  ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுமா என்று தெரியவில்லை என்று, அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புலம்பியுள்ளார்.  

ஒருவேளை யோகி பாபுவின் திருமண வரவேற்ப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறாவிட்டாலும், மற்றொரு தேதியில் பிரமாண்டமாக நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.