நடிகர் சந்தானம் ஹீரோவாக ஆக்ஷன் காட்சிகளில் இறங்கி அடித்த 'சக்க போடு போடு ராஜா' படம் படு  தோல்வியை தழுவியதால். தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார், ஹாரர் காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, இந்த படத்தை தொடர்ந்து தில்லுக்கு துட்டு 2 படத்தை, தயாரித்து நடித்தார் சந்தானம். 

 தற்போது 'A1 ' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜான்சன் என்பவர் இயக்கி வருகிறார் . மேலும் இயக்குனர் கண்ணன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அதே போல் தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக இருக்கும், நடிகர் யோகிபாபுவுடன் கைகோர்த்து ஒரு படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இப்படத்திற்கு 'டகால்டி' என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிது. விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.