Yep The shooting of the dhuruva natchathiram starts from tomorrow
விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நாளை முதல் தொடங்குகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.
இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.
படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
நடிகர் விக்ரம், விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்கெட்ச்‘ படத்திலும், மற்றும் கௌதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்‘ ஆகிய இரண்டிலுமே மாறி மாறி நடிக்க முடிவு செய்திருந்தார்.
ஆனால், கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பணப் பிரச்சனையால் ‘துருவ நட்சத்திரம்‘ படத்தின் படப்பிடிப்பு இடையில் தடைப்பட்டது. இதனால் நடிகர் விக்ரம் “ஸ்கெட்ச்” படத்தில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் “துருவ நட்சத்திரம்” படப்பிடிப்பை நாளை (ஜூன் 21) முதல் ஸ்லோவேனியாவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
