Yep Hero of the heroine of sangamitha
இயக்குனர் சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சங்கமித்ரா’ படத்தில் நடிகை ஹன்சிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள சரித்திரப் படம் ‘சங்கமித்ரா’. ஆர்யா, ஜெயம் ரவி நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால், படத்தில் இருந்து அவரை நீக்குவதாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் திடீரென அறிவித்தது.
எனவே, ஹீரோயினாக யார் நடிக்கலாம் என்ற தேடப்பட்டு வந்த நிலையில், ஹன்சிகாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’, ‘ஆம்பள’ என சுந்தர்.சி.யின் படங்களில் அதிகமாக நடித்துள்ளார் ஹன்சிகா. அத்துடன், ‘புலி’ படத்திலும் இளவரசியாக நடித்துள்ளார். எனவே, ஹன்சிகாவே ‘சங்கமித்ரா’வாக நடிக்கலாம் என செய்திகள் வெளியானது. ஆனால், அவருக்கு தற்போது மார்கெட் இல்லாததால் அவர் வேண்டாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதால் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்பு நடிகை நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், இரண்டு வருடங்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் அவர் தயங்கியதாக தெரிகிறது. எனவே தற்போது வேறு வழியின்றி ஹன்சிகாவிடம் தொடர்ந்து படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர் இப்படத்தில் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்பது கொசுறு தகவல்.
