Years naked house was detained and tortured her daugther

அர்ஜெண்டினாவில் ஒரு வீட்டில் இருந்து அடிக்கடி, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. யார் என்று பார்க்க அந்த வீட்டிற்கு அக்கம் பக்கத்தினர் சென்றால் கூட அவர்களை யாரும் உள்ளே அனுமதிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் வசித்து வந்த ஒருவர் இந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்... அங்கு போலீசாருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. 

அந்த வீட்டில் ஒரு பெண், நிர்வாணமாக கட்டிலில் கட்டப்பட்டிருந்தார். பின் இவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலிசார் கூறுகையில், தங்களுக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் இங்கு வந்ததாகவும், அப்போது மாரிஸ்சா அல்மிரோன் (42) வயதான பெண் ஒருவர் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்.

மேலும் அந்த பெண் இளமையாக இருந்த போது, ஆண் நண்பர் வைத்திருந்ததால் பெண்ணின் தந்தை இந்த கொடூர தண்டனை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பின் 8 வருடங்களில் இந்த பெண்ணின் தந்தை இறந்த பின்பும் இந்த பெண்ணின் சகோதரர் 12 வருடங்களாக இந்த கொடூர தண்டனையை பின்பற்றி வந்ததாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து 20 வருடங்கள் இந்த கொடுமையை அனுபவித்து வந்ததால், இவரின் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உரிய சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ மனைக்கு இந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, தகவல் கொடுத்த நபர் கூறுகையில், அந்த பெண் பல வருடங்களாக இந்த துன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். அவ்வப்போது இவரின் அலறல் சத்தம் மட்டும் தான் கேட்கும். என்றும் தற்போது இந்த பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர் என கூறியுள்ளார். மேலும் இந்த பெண்ணின் சகோதர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.