கிராஸ் வெரிபிகேஷன் கூட செய்யாமல், போலி டுவிட்டர் கணக்கை வரவேற்கும் விதமாக டுவிட் செய்த நடிகை யாஷிகாவை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். உச்ச நட்சத்திரமாக உள்ளபோதும், இவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியே உள்ளார். அவரது மனைவி ஷாலினியும் இதனை பாலோ செய்து வருகிறார். இவர்கள் குறித்த எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் அது அவர்களது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாகத் தான் வெளியிடுவார்கள்.
இந்த நிலையில் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று நேற்று தொடங்கப்பட்டுள்ளது. Shalini Ajith Kumar என்ற பெயர் கொண்ட அந்த டுவிட்டர் பக்கத்தில் அஜித், ஷாலினி ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “டுவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி. முதல் டுவிட்டே எனது அன்பு கணவருடன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது போலி கணக்காக தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்து வந்த நிலையில், இன்று காலை நடிகை யாஷிகா, ஷாலினி பெயரில் உள்ள டுவிட்டை ரீ-டுவிட் செய்து, வெல்கம் மேம் என பதிவிட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். யாஷிகாவின் பதிவுக்கு பின்னர் இந்த விவகாரம் பேசுபொருள் ஆனதால், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, ஷாலினி பெயரில் இருப்பது போலி டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதி செய்தார்.
கிராஸ் வெரிபிகேஷன் கூட செய்யாமல், போலி டுவிட்டர் கணக்கை வரவேற்கும் விதமாக டுவிட் செய்த நடிகை யாஷிகாவை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சிலர், ‘போதையில் ரீ-டுவிட் செய்துவிட்டாயா’ என்றெல்லாம் கிண்டலடித்து வருகின்றனர். இதனால் யாஷிகா கடும் அப்செட்டில் உள்ளாராம்.
